எம்பிபிஎஸ் டாக்டர்கள் மேற்படிப்புக்காக எம்.எஸ். மற்றும் எம்.டி படிப்பிற்காக முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வு எழுதி தேர்வாகி தங்கள் மருத்துவ தகுதியை உயர்த்தி கொள்வது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவுன்சில் சார்பில் தேர்வு நடத்தப்படும். இதில் எம்பிபிஎஸ் டாக்டர்கள் தங்கள் பணி செய்யும் ஊரில்  நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலை மேற்படிப்பை படிப்பார்கள். இதில் தற்போது நடைபெற்றுள்ள  நூதன மோசடி குறித்து உளவு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவையை  சேர்ந்த பிரபல மருத்துவமனை உரிமையாளரின் மகன் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளார் .இதற்காக அவர் மதுரையில் இரண்டு போலியான முகவரிகளையும் சிவகங்கை  மாவட்டத்தில் போலியான ஒரு முகவரியும் தயாரித்து கொடுத்து  மூன்று தேர்வு மையங்களில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் அந்த மாவட்டங்களில் மருத்துவமனைகளில் பணிபுரிவதாக போலியான ஆவணங்களையும் முகவரியையும் தயாரித்து விண்ணப்பித்துள்ளார். பின்னர் அவர் கடந்த மார்ச் மாதம் மதுரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார் . இதில் அவர் மருத்துவ மேற்படிப்பிற்கு தகுதியான 187 மார்க்குகளை மோசடியான முறையில் பெற்றுள்ளார்.  தொடர்ந்து புனேவில்  உள்ள மருத்துவ கல்லூரியில் எம்டி படிப்பதற்காக விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் மருத்துவ மேற்படிப்பு சேரவில்லை. மருத்துவ மேற்படிப்பு சேராததால்  இது குறித்து மருத்துவ கவுன்சிலுக்கு சந்தேகம் எழுந்தது.தொடர்ந்து கோவையில்  ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கோவை டாக்டர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோல டாக்டராக பணி செய்வதற்கு தடையும் விதிக்கப்படும் . கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் போலி  முகவரியை கொடுத்து மருத்துவ மேல் படிப்பிற்கு  மோசடியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து உளவு பிரிவு விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *