கோவை,

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் காதர் .இவர் ஹஜ் பயணம் செல்வதற்கான டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கேரளாவில் உள்ள நிறுவனத்துடன் அப்துல் காதர் ஒப்பந்தம் செய்திருந்தார் .அந்த நிறுவனம் மூலம் இவர் பயணிகளை  அனுப்பி வைப்பது வழக்கம் .அந்த வகையில் அப்துல் காதர் கேரளா நிறுவனத்திற்கு 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை தர வேண்டி இருந்தது. அந்த நிறுவனத்தினரும் ஆறு மாத கால அவகாசம் கொடுத்திருந்தனர் .மேலும் பணத்திற்கு உத்தரவாதமாக அப்துல் காதர் தனது குடும்பத்தினரின் ஆறு பாஸ்போர்ட் இரண்டு வங்கி காசோலைகள் மற்றும் தனது அலுவலக சாவி ஆகியவற்றை கொடுத்திருந்தார் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்த முபாரக் மற்றும் சிலர் அப்துல் காதரின் வீட்டிற்கு வந்துள்ளனர் .அப்போது அவர்கள் அப்துல் காதரின் பாஸ்போர்ட்டையும் வேண்டுமென கேட்டு மிரட்டி உள்ளனர் .தொடர்ந்து கேரளாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் குறித்து தவறான தகவல்களை அப்துல் காதரை பேச வைத்து அதனை வீடியோவாக எடுத்துள்ளனர் .பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். அதே சமயத்தில் அப்துல் காதர் மூலம் கோவையைச் சேர்ந்த பைசல் மற்றும் அப்துல் கபூர் ஆகியோர் மீது பொய்யான புகாரை ஆன்லைன் மூலம் அளிக்க வைத்துள்ளனர். இதை தொடர்ந்து அப்துல் காதர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் முபாரக் ,மதுரையைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரின் மகன் ஜமாலுதீன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஹாஜா ஹமானுல்லா  ,முஹம்மது முஸ்தபா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *