கோவை,
கோவை மேட்டுப்பாளையம் ரோடு சுமித் அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் நந்தகிஷோர் இவருக்கு சொந்தமான ஆர்.கே. கேஸ்டில் என்ற கட்டிடம் கோவை ஆர் எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் உள்ளது. இங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அல்மோஸ் என்பவர் உடற்பயிற்சி நிலையத்தை துவக்கினார். இதற்காக ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் ஆகவும் மாத வாடகை 60 ஆயிரம் ரூபாய் என ஒப்பந்தம் செய்தார். ஆனால் ஒப்பந்தம் செய்து சில நாட்களிலேயே கட்டிட உரிமையாளர் நந்தகிஷோர் வாடகை ஒப்பந்தத்தை தராமல் இருந்துள்ளார் .இதை தொடர்ந்து உடற்பயிற்சி நிறுவன உரிமையாளர் வாடகை ஒப்பந்தத்தை தருமாறு நந்த கிஷோரிடம் கேட்டுள்ளார் .அப்போது அவர் வாடகை தொகை குறைவாக உள்ளது என்றும் வாடகையை உயர்த்திக் கொடுத்தால் மட்டுமே ஒப்பந்தத்தை தர முடியும் என கூறினார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் உடற்பயிற்சி நிறுவன உரிமையாளர் இது குறித்து ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். மேலும் கோவை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி நிறுவன உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து தனது உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு கதவில் வேறு பூட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் உடற்பயிற்சி நிலையத்திற்குள் இருந்த உடற்பயிற்சி உபகரணங்கள் ,லேப்டாப் உள்ளிட்ட 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து பொருள்களும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து கட்டிட உரிமையாளரிடம் அல்மோஸ் கேட்டபோது மழப்பலான பதிலை கூறியுள்ளார். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆர் எஸ் புரம் போலீசார் கட்டிட உரிமையாளர் நந்த கிஷோருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு வராமல் தலைமறைவானார். இதை தொடர்ந்து ஆர் எஸ் புரம் போலீசார் உடற்பயிற்சி நிறுவன உரிமையாளருக்கு தெரியாமல் பூட்டை உடைத்து அதன் உள்ளே இருந்த 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடியதாக கட்டிட உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் நந்தகிஷோர் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.