
கோவை,
இந்து மக்கள் கட்சி இளைஞரணி
மாநில பொதுச்செயலாளர் கோவையை சேர்ந்த கே.சூர்யா தலைமையில் நிர்வாகிகள் கையில் விநாயகர் சிலையுடன் தமிழக
முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்தனர்.
அதில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காவல்துறை தரப்பில் இப்போது சில நிபந்தனைகளை கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இவ்வகை கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையம் நீக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்கள் விழாவையும் தாண்டி தமிழகத்தில் மக்கள் விழாவாக எழுச்சியாக கொண்டாடப்படுகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி விழாவை மகாராஷ்டிரா மாநிலத்தில் எப்படி அரசு விழாவாக அறிவித்துள்ளார்களோ அதேபோல் தமிழகத்திலும் அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
