கோவை,

‘மிக்ஜாம்’ புயலின் கோரதாண்டவத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல லட்சம் மக்கள் கடந்த மூன்று நாட்களாக பெரியளவில் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். புயல் பாதிப்பிற்குள்ளாகி உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்டம், ஒன்னிபாளையம்  எல்லை கருப்பராயன் கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் தேன்கூடு தன்னார்வ அமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  5 கிலோ அரிசி பைகள்  25  கிலோ முட்டைகள்  50 கிலோ மூட்டைகள் என  மொத்தம் 22 டன் அரிசி முட்டைகள்  ,4000 கிலோ சாப்பாட்டு உப்பு பாக்கெட்கள், 50 ஆயிரம்  நாப்கின் பாக்கெட்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் கணியூர் டோல்கேட், அருகில், கருமத்தம்பட்டியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  தேன்கூடு தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மு . லோகநாதன் நிவாரண பொருட்கள் லாரிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து அவர் கூறும்போது ஏற்கனவே கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக முழுவதும் சாணிடைசர் மாஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எங்களது அனைத்தும் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டது. தற்போது சென்னை புயல் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் பொது மக்களுக்கு உதவும் விதமாக தற்போது நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளோம். இதனை சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் நேரடியாக எங்களது அமைப்பின் சார்பில் வழங்க உள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் எல்லை கருப்பராயன் கோவில் நிர்வாகம், பக்தர்கள் மற்றும் தேன்கூடு தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *