கோவை,
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்க பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மசானிக் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி துவங்கியது. ரோட்ராக்ட் கிளப் ஆப் ராமகிருஷ்ணா கல்லூரி, குழந்தைகள் நல மருத்துவ சங்கம் கோவை பிரிவு, கோவை மாநகராட்சி சுகாதார பிரிவு மற்றும் மசானிக் மருத்துவமனை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பூபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.மசானிக் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் சென்று மீண்டும் மசானிக் மருத்துவமனை வளாகத்தில் வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் குழந்தைகள் நல மருத்துவ சங்கம் கோவை பிரிவு தலைவர் டாக்டர் லட்சுமி சாந்தி, பொருளாளர் டாக்டர் கார்த்திகேயன், மசானிக் மருத்துவமனை டாக்டர்கள் கிருஷ்ணசாமி ,ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.