கோவை,
குழந்தைகள் நல மருத்துவ சங்கம் மற்றும் அடலஸன்ட் ஹெல்த் அகாடமி சார்பில் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தென்மண்டல அளவிலான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் இஸ்மாயில், டாக்டர் லட்சுமி சாந்தி, டாக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். வளர் இளம் பருவத்தினருக்கு குறிப்பாக 10 வயது முதல் 18 வயது வரை உள்ளோருக்கு ஏற்படும் உடல் நலம் மற்றும் மனநல பிரச்சினைகள் குறித்தும் அதற்குரிய தீர்வுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து பயிற்சியாளர்கள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக செல்போன் பயன்படுத்துதல் , உடம்பு பழக்க வழக்கங்கள் இதனால் ஏற்படும் உடல்ரீர் ரீதியான பிரச்சனைகள் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை எப்படி மருத்துவர்கள் அணுகுவது என்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது .இந்த ஒரு நாள் கருத்தரங்கில் தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.