கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் ரத்தின விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவையில் புகழ்பெற்ற விநாயகர் கோவிலில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .தொடர்ந்து ரத்தின விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மாலை திருவீதி உலா நடைபெற்றது .கோவை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில்கள் அணி மேற்பார்வையாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திருவீதி உலா கோவிலில் துவங்கி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வந்து விநாயகரை வழிபட்டனர். இந்த திருவீதி உலா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக பிரமுகர் பூரி கமல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.