ஹேர் கிளினிக்கில் மோசடி: ஒருவர் கைது: இருவர் தலைமறைவு

கோவை,

கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர்  தினேஷ் (42). இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அடவ் குரோ ஹேர் கிளினிக் நிறுவனத்தின் கோவை பிரான்சைஸ் எடுத்து கடந்த 10 மாதங்களாக நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மண்டல மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்த வந்தார். கடந்த மே மாதத்தில் இருந்து பாலகிருஷ்ணன் பணிக்கு வராமல் இருந்துள்ளார. அதன் பிறகு நிறுவனத்தின் கணக்குகளை சரி பார்த்தபோது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பாலகிருஷ்ணன் திருடி சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் சார்பில் பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து தலைமை அலுவலகத்திற்கு வந்து முறைப்படி வேலை ராஜினாமா செய்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு நிறுவனம் சார்பில் கூறப்பட்டது .அதன் பிறகு பாலகிருஷ்ணன் நிறுவனத்திற்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் நிறுவனத்தில் இருந்து பாலகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருந்த லேப்டாப், செல்போன் ஆகியவற்றை தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைத்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் புதிதாக ஆரா ஆஸ்தடிக் கிளினிக் என்ற பெயரில் கோவையில் புதிதாக துவக்கி இருப்பதாகவும் அங்கு வருமாறு பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .இதற்கு உதவியாக சென்னை அலுவலகத்தில் தலைமை அலுவலராக பணிபுரிந்து வந்த பிரேமலதா மூலம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விபரங்களை எடுத்து அவர்களை வைத்து புதிய நிறுவனத்தை நன்றாக நடத்தலாம் என பாலகிருஷ்ணன் திட்டம் திட்டி இருந்திருக்கிறார். இதன் காரணமாக தினேஷ் நடத்தி வந்த கோவை கிளையில் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டது .தொடர்ந்து  பாலகிருஷ்ணனை போன் மூலம் அழைத்து தினேஷ் பேசிய போது கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து தினேஷ் கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .பின்னர் கோவை ஆர் எஸ் புரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (35) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சேலம்  கிளையின் நடத்தி வந்த கிஷோர் குமார் மற்றும் சென்னை அண்ணாநகர் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த ஜேசுதாஸ் என்பவரின் மனைவி பிரேமலதா( 48) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *