சிறந்த சமூக சேவைகள் செய்து வருவதை பாராட்டி ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி சுதாவுக்கு ஜமைக்கா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
ஈரோடு அடுத்த பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவரின் மனைவி சுதா.சமூக சேவைகள் அதிகளவில் செய்து வருகிறார்.கொரோனா பேரிடர் காலத்தில் ஏராளமானவருக்கு பலதரப்பட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை அந்த சமயத்தில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் சுதாவின் சமூக சேவையை பாராட்டி சர்வதேச ஜமைக்கா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது குறித்து சுதா செய்தியாளர்களிடம் கூறும் போது கணவர் ஜெகநாதன் , எனது பெற்றோர் சண்முகம் சுகந்தி மற்றும் மகள்கள் கிரண்யா, ஜோஷிகா ஆகியோர் எனக்கு உதவிகரமாக இருந்ததால் இந்த பணிகளை செய்ய முடிந்தது என்றார்.