கோவை,
கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக மோசடி புகார் எழுந்து தற்போது அது விசாரணையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திமா நகர் பகுதிக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சிஎம் நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை ராஜா ராம் என்பவரது மகன் வெங்கட் அடியாட்களுடன் சி.எம் நகர் பகுதிக்கு வந்து இங்குள்ள 43 சென்ட் இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறியுள்ளார். இதை அறிந்த சிஎம் நகர் வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான அங்கு குவிந்தனர் .இது பற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினரையும் திங்கட்கிழமை காலை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிவிட்டு அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வெங்கட் மற்றும் 15 க்கும் மேற்பட்டோர் பைக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களில் கட்டுமான பொருட்களுடன் சிஎம் நகர் பகுதிக்கு மீண்டும் வந்து கட்டுமான பொருட்களை காலி இடத்தில் வைக்க முயன்றனர். உடனே சிஎம் நகர் பொதுமக்கள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் அப்போது போலீசார் முன்னிலையில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது வெங்கட் அழைத்து வந்திருந்த அடியாட்களில் ஒருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்த பெண்கள் மீது மோதினார். இதில் சில பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. சரவணம்பட்டி போலீசார் அங்கு விசாரித்துக் கொண்டிருந்த பொழுது பெண்கள் மீது பைக்கை ஏற்றி ய சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் ஜிப்பில் ஏற்றினார் பின்னர் சி எம் நகர் பொதுமக்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்குமாறு கூறினர்.பின்னர் சிஎம் நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள் பொருளாளர் சண்முகசுந்தரம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 10 மணியளவில் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர் .இதனால் சி எம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் இரவு 12:30 மணி வரை போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்யாததால் அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.